கவின் மிரட்டிவிட்டாரு… மாஸ் காட்டும் Bloody Beggar ட்ரெய்லர்!
Author: Udayachandran RadhaKrishnan18 October 2024, 8:10 pm
வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின், ஸ்டார் படத்துக்கு பிறகு நடித்துள்ள படம் பிளடி பெக்கர்.
சிவபாலன் இயக்கியுள்ள இந்த படத்தை நெல்சன் தயாரித்துள்ளார். நெல்சனின் உதவி இயக்குநர் சிவபாலன் என்பதால் படம் கண்டிப்பாக ஹிட் என கவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதுவும் பிச்சைக்காரராக நடித்துள்ள கவின், கனக்கச்சிதமாக அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு வரும் அக்.,31ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. ஒரு காட்சியில் குணா கமல் போல கருப்பாக மேக்கப் போட்டு அசத்தியுள்ளார்.
இதையும் படியுங்க: போடி சொம்பு தூக்கி…. போற போக்கு பார்த்த கள்ளகாதல் ஜோடியை பிரித்து தான் அனுப்புவாங்க போல!
ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை குவித்து வருகிறது.
பிச்சைக்காரராக நடிக்கும் காட்சியில் கவின் மிரட்டியுள்ளார்.
படத்தில் உண்மையில் அவர் பிச்சைக்காரர்தானா இல்லை வேடமணிந்து கண்டுபிடிக்கும் RAW AGENT அல்லது உயர் அதிகாரியாக இருப்பாரோ என்பதுதான் படத்தில் டுவிஸ்ட் என ரசிகர்கள் ட்ரெயலரை பார்த்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.