கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் கவின். இதனைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிக பிரபலம் அடைந்தார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
இதனைத் தொடர்ந்து, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய கவின், நட்புன்னா என்னனு தெரியுமா என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 2019ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான லாஸ்லியாவுடன் காதல் சர்ச்சையில் இவரது பெயர் அடிபட்டது.
பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் வெவ்வேறு பாதைகளில் சென்றுவிட்டனர். கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாடா திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் கவின். இதனிடையே கவின் தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் கவின் அடுத்ததாக ‘ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் லால், அதிதி போஹாங்கர், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது ஸ்டார் படக்குழு புதிய மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்துவிட்டனர். இப்படத்திற்கு இப்போதே பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே கவின் டாடாவை தொடர்ந்து ஸ்டார் படத்தையும் சூப்பர் ஹிட் கொடுப்பார் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.