தந்தையிடம் சரமாரியாக சண்டையிட்ட கொட்டாச்சி மகள்.. மண்டை மேல 4 கொட்டு கொட்டுனா தெரியும்..!(வீடியோ)

Author: Vignesh
14 August 2023, 3:00 pm

நடிகர் கொட்டாச்சி விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகருடன் தமிழ் சினிமாவில் சிறுசிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். பின் பட வாய்ப்பு குறைந்ததால் திரை உலகை விட்டு சற்று ஒதுங்கி இருந்த இவருக்கு அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தார்.

ஆனால் இவருக்கு கிடைக்காத வரவேற்பு இவரை மகளுக்கு கிடைத்தது. ஆறு வயதில் இருந்த இவரது மகள் மானஸ்வி இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்கி இருந்தார்.

kottachi and manashvi-updatenews360

பின்பு சில படங்களில் நடித்த மானஸ்வி விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார். மகளால் கொட்டாச்சி சொந்த வீடு வாங்கி அதில் குடியேறினார். தற்போது, மலேசியாவில் உள்ள காரம் சாரம் என்ற உணவக விளம்பரத்திற்காக தனது தந்தை கொட்டாச்சியுடன் சண்டையிடும் வீடியோ காட்சி வெளியாகி இணையதளத்தில் வைரலானது.

இதனைப் பார்த்த நெட்டிஷன்கள் பலர் இந்த வயசுல இவ்வளவு அடம் பிடிக்கக்கூடாது உங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு மேல வந்தவர். மண்ட மேல நாலு கொட்டு கொட்டுங்க எல்லாம் சரியாகிவிடும். பிள்ளையை அதட்டி வளத்துங்க கேட்டதெல்லாம் கொடுக்காதீங்க என்று தெரிவித்திருந்தனர். இதுகுறித்து கொட்டாச்சி கூறுகையில், நிஜத்தில் தனது மகள் மிகவும் மரியாதை கொடுப்பவர். இது ஒரு விளம்பரத்திற்காக நாங்கள் இருவரும் செய்யும் நடிப்பு என்று தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ