வடிவேலு ரொம்ப மோசம்…. எங்க சம்பளத்தை பிடிங்கி Pocket’ல போட்டுட்டு போயிடுவாரு – வேதனையை பகிர்ந்த பிரபலம்!

Author: Shree
26 May 2023, 1:41 pm

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான கொட்டாச்சி சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்த கேள்விக்கு, ” அவர் மிகவும் மோசமானவர். தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு உரிய சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுத்தாலும். வடிவேலு அதை பிடுங்கிக்கொண்டு… ஏய் இவங்களுக்கு எதுக்கு எவ்வளவு சம்பளம்? என கேட்பார். ஆனால் விவேக் அப்படி கிடையாது, அவர் சக காமெடி நடிகர்களுக்கு அன்றைய நாளுக்கான கூலியை அப்போவே கொடுக்க சொல்வார். நிறைய பேருக்கு உதவி செய்வார். விவேக் மாதிரி வடிவேலு ஒரு காலம் வர முடியாது என கூறினார். இந்த பேட்டி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!
  • Close menu