பிரபல நடிகரின் மகளை 5 நிமிடம் விடாமல் லிப் லாக் செய்த நடிகர் : படப்பிடிப்பில் ஷாக் சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan25 March 2025, 1:48 pm
சினிமாவில் முத்தக்காட்சி என்றால் முகம் சுளிக்கும் ரசிகர்களே அதிகம். ஆனால் தற்போதைய காலத்தில் முத்தக்காட்சி என்பது படத்துக்கு படம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அன்றைய காலத்தில் முத்தக்காட்சி என்பது குத்தமான ஒரு செயலாகவே பார்க்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான படங்களில் அப்படி ஒரு காட்சி வைக்க நடிகர், நடிகைகள் சம்மதம் தெரிவிப்பது அரிதான ஒன்று.
இதையும் படியுங்க: பிரகதியின் காதலர் இந்த பிரபலமா? சாம் விஷால் இல்லையா? தேதியுடன் அறிவிப்பு!
ஆனால் நடிகர் ஜெமினி கணேசனின் மகளாக ரேகாவுக்கு படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்திய சினிமாவில் 90களில் டாப் நடிகையாக வந்தவர் ரேகா. வங்காள மொழியில் நடித்த போது நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தை பற்றி சுயசரிதையான ரேகா தி அண்டோல்ட் ஸ்டோரியில் கூறியுள்ளார்.
அப்போது ரேகாவுக்கு 32 வயது. வங்காள சூப்பர் ஸ்டா பிஸ்வஜித்துடன் ஒரு காதல் காட்சியில் நடித்திருந்தார். ஆனால் பிஸ்வஜித்தும் அந்த படத்தின் இயக்குநர் குல்ஜித் பாலும் ரேகாவுக்கு தெரியாமல் ஒரு முத்தக்காட்சியை எடுத்துள்ளனர்.

காதல் காட்சியில் நடிக்கும் போது கேமரா ரோல் என்றும் சொன்னதும், காட்சி முடிந்தும் கட் சொல்லவில்லை. இதன் பின் கட்டாயப்படுத்தி 5 நிமிடம் விடாமல் பிஸ்வஜித், ரேகாவுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரேகா, முத்தம் குறித்து எதுவும் சொல்லாததால் ஷாட் முடிந்ததும் அழுதுள்ளார்.

இதனால் பிஸ்வஜித்தை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அவரோ இயக்குநர் சொன்னதை நான் செய்தேன் என கூறியுள்ளார். இந்த விவகாரத்தை ரேகா பெரிது படுத்தாமல் விட்டுள்ளார். காரணம் பணடத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் என நினைத்துள்ளார்.
ஆனால் இந்த படம் வெளியாக படாதபாடு பட்டுள்ளார் தயாரிப்பாளர். காரணம் சென்சாரில் இந்த காட்சியால் 10 ஆண்டுகள் இழுத்தடிக்கப்ப்டடு பின்னர் வெளியாகி, படம் படுதோல்வியை சந்தித்ததாம்.
