‘இவங்க கூட என்னால நடிக்க முடியாது’..: புன்னகை அரசிக்கே இந்த நிலைமையா..? சினேகாவை ஒதுக்கிய பிரபல நடிகர்..!
Author: Vignesh20 January 2023, 4:30 pm
புன்னகை அரசி என்று தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. அந்த அளவுக்கு சிரிப்பால் எல்லோரையும் கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் மலையாளத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
2000 ஆம் ஆண்டில் மாதவன் மற்றும் சினேகா நடிப்பில் என்னவளே என்றபடம் வெளியானது. இதில் சினேகா, மணிவண்ணன் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் நடிகை சினேகா தமிழில் செய்யப்பட்டார். இந்த படத்தில் முதலில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் தான் நடிக்க இருந்ததாகவும், அந்த நேரத்தில் பிஸியான நடிகையாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதால், இந்த படத்திற்கு இயக்குனர் நடிகை ஜோதிகாவை அணுகி அவரும் வேறு படத்தில் நடித்து வந்ததால் இதில் நடிக்க முடியாமல் போனதாம்.
இதனையடுத்து, இயக்குனர் சினேகாவை நடிக்க வைக்க முடிவு செய்த நிலையில், மாதவன் இந்த படத்திற்கு புதுமுக நடிகை வேண்டாம் என்றும், முன்னணி நடிகையுடன் மட்டும் தான் நடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இருப்பினும் இயக்குனர் சினேகா சரியாக இருப்பார் என்று அவருக்கு எடுத்து கூறியதால், சினேகாவுடன் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். அதன் பின் தான் மாதவன் என்னவளே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.