சினேகா ஜோடியாக நடிக்க ‘நோ’ சொன்ன பிரபல தமிழ் நடிகர்.. வெளியான ஷாக்கிங் தகவல் ..!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2023, 11:00 am

2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இங்கனே ஒரு நிலாபக்ஷி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ‘புன்னகை அரசி’ சினேகா. தனது சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர், இதனைத் தொடர்ந்து, தமிழில் ‘என்னவளே’ மற்றும் தெலுங்கில் ‘Priyamaina Neeku’ போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், இன்றளவும் மக்கள் பேவரைட் ஆக உள்ளார்.

sneha prasanna - updatenews360.jpg e

இந்நிலையில், சினேகா அவர்கள் தனது ஆரம்ப காலகட்டத்தில் படவாய்ப்பை பெற பட்ட கஷ்டம் குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் கே சுரேஷ் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘என்னவளே’. இப்படத்தில் சினேகா, மணிவண்ணன், வையாபுரி, சார்லி என பலரும் நடித்திருந்தனர்.

sneha - updatenews360.jpg 2.jpg d

இப்படத்தின் மூலம் சினேகா தமிழ் திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானார். முதலில் இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கவிருந்தது சிம்ரன் தானாம். ஆனால் அந்த நேரத்தில் அவர் பிஸியாக பல படங்களில் நடித்துவந்ததால் கால்ஷீட் கிடைக்கவில்லை. இதையடுத்து இப்படத்தின் இயக்குனர் கே சுரேஷின் அடுத்த சாய்ஸாக இருந்தது நடிகை ஜோதிகா.

ஆனால் அவரும் அப்போது வேறு படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில் கே சுரேஷ் அவர்கள் மாதவனிடம், சினேகாவை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்தார். இதற்கு மாதவன் ‘இந்த படத்திற்கு புதுமுக நடிகை வேண்டாம், முன்னணி நடிகை தான் வேண்டும்’ என்று சினேகாவிற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இருப்பினும் கே சுரேஷ், சினேகா தான் இப்படத்திற்கு பொருத்தமாக இருப்பார் கூறியுள்ளார். இதற்கு கடைசியில் நடிகர் மாதவனும் ஒப்புக்கொண்டாராம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1202

    5

    2