மம்முட்டியின் வீட்டில் முக்கிய நபர் காலமானார் – இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!
Author: Vignesh21 April 2023, 11:30 am
மலையாள சினிமாவில் மம்முட்டி முன்னணி நடிகராக இருப்பவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என எல்லா மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் அங்கு அதிகம் கலெக்ஷன் பெறுகின்றன.
தமிழிலும் தற்போது மம்முட்டி இப்போது அதிக கதைகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சினிமாவில் அறிமுகமாகி நல்ல ஹிட் படங்கள் கொடுத்து வருவது குறிப்பித்தக்கது.
சமீபத்தில், இவரது நடிப்பில் வெளியான சீதா ராமம் படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட். தற்போது மம்முட்டி-துல்கர் குடும்பத்தில் ஒரு சோகமான விஷயம் தற்போது நடந்துள்ளது. அதாவது நடிகர் மம்முட்டியின் தாயார் அவர்கள் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.