ஒரு முத்தக்காட்சிக்கு இவ்வளவு கஷ்டப்படணுமா?.. 15 முறை டேக் எடுத்த நகுல்..!

Author: Vignesh
22 July 2024, 5:39 pm

2003 ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் தமிழ் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் பரத், ஜெனிலியா, மணிகண்டன், நகுல் சித்தார்த், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில், பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான மணிகண்டன் சினிமாவிலிருந்து விலகி இருந்து இவர் தற்போது, மகாராஜா படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்து இருக்கிறார். பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மணிகண்டன் பாய்ஸ் படத்திற்கு பிறகு காதல் FM, கிச்சா வயசு 16, யுகா போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

Boys-Movie-Poster

மேலும் படிக்க: என்ன சாதிக்க போறீங்க.. சாதி மறுப்பு திருமணம்.. கொந்தளித்த இயக்குனர் மோகன் ஜி..!

யுகா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய அப்பா இறந்துவிட்டார். அப்பா நிறைய கடன் வாங்கி வைத்திருந்தார். நான் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை வைத்து ஓரளவு கடன்களை அடைத்தேன். அந்த காலம் ரொம்ப கஷ்டமான காலமாக எனக்கு இருந்தது. என்னுடைய வாழ்க்கையில், நிறைய கஷ்டம் துயரம் ஏமாற்றம், தோல்வி எனக்கு இருந்தது.

Boys-Movie-Poster

மேலும் படிக்க: காஸ்ட்லி வில்லனான பகத் பாசில்… புஷ்பா 2 -வில் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?..

நான் நிறைய பேரை காதலித்திருக்கிறேன். இப்பொழுது, எனக்கு 42 வயதாகிவிட்டது. நான் சரியாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. முகநூல் மூலமாக மலேசிய பெண் ஒருவர் என்னிடம் பேசி பழகினார். நான் மலேசியா சென்று அவருடன் தங்கி இருந்தேன். அந்த சமயத்தில், நான் எக்கச்சக்க டார்ச்சரை அனுபவித்தேன். அந்தப் பெண் எப்போதும் என்னிடம் பிரச்சனை செய்வார். எப்படியோ அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து விட்டேன் என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

மேலும், பேசுகையில் பாய்ஸ் படத்தில் நகுளுடன் நடந்த முத்த காட்சி குறித்தும் பேசியிருந்தார். அதுவும் சாதாரணமுத்தம் கிடையாது. உதட்டில் முத்தம் கொடுக்க வேண்டும் அந்த காட்சி எடுக்கும் போது பதினைந்து டேக்குக்கு மேல் போனது. அந்த சாட் நன்றாக வரவேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கிட்டனர். அதை எல்லாம் சகித்துக் கொண்டு முகம் சுளிக்காமல் அந்த காட்சியில் நடித்தோம் என்று மணிகண்டன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • Serial Actor Who Got Divorce from his wife விவாகரத்து கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்!
  • Views: - 141

    0

    0