காவல் நிலையம் முன்பு பிரபல நடிகர் போராட்டம்.. கைது செய்ததால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2025, 12:59 pm

நடிகர் மோகன் பாபுவின் இளைய மகனும் திரைப்பட நடிகருமான மஞ்சு மனோஜ் நேற்று நள்ளிரவு பகராபேட்டை காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் செய்தார்.

திருப்பதியில் இருக்கும் மஞ்சு மனோஜ் பகராபேட்டை அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு இரவு அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது, ​​தனியார் பவுன்சர்கள் இருப்பதைக் கவனித்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர்.

இதுகுறித்து பவுன்சர்கள் மனோஜிடம் தெரிவித்ததால் உடனடியாக மனோஜ் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு போலீசாரிடம் ஏன் என்னையும் எனது பவுன்சர்களை விசாரிக்கிறார்கள் என்று கோபத்தை வெளிப்படுத்தி தான் செல்லும் இடமெல்லாம் போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும் வேண்டுமென்றால் தன்னை கைது செய்யுங்கள் என போலீசாரிடம் கூறினார்.

பின்னர் பாகராபேட்டை காவல் நிலையத்தின் படிகளில் அமர்ந்த மனோஜ் இரவு 11 மணியில் இருந்து சுமார் இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்தார். அப்போது
நான் என்ன தீவிரவாதியா, திருடனா ஏன் நள்ளிரவில் என்னை மிரட்டுகிறீர்கள். முதல்வரின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்கள் ஏன் அவருடைய பெயரைப் பயன்படுத்துகீறார்கள்? என்னை மிரட்டினன்னு யார் சொன்னார்கள் என்று கூறினால் நான் இங்க இருந்து போயிடுவேன் என்றார்.

இந்தச் சூழலில்தான் பாகராபேட்டை சி.ஐ. இம்ரான் பாஷா மஞ்சு மனோஜிடம் போனில் பேசினார். அப்போது நான் ரிசார்ட்டில் இருந்தால் எஸ்.ஐ. மற்றும் கான்ஸ்டபிள்கள் போலீஸ் வாகனத்தில் சைரன்களுடன் ஏன் வந்தார்கள்.

நான் என்ன புஷ்பாவா ஷெகாவத் போல வந்து என்னை பிடிக்க என்று கூறினார். தன்னை வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு வருவதாகவும் தனக்கு ரிசார்ட் வழங்கப்படக்கூடாது , ஓட்டலில் உணவு பரிமாறப்படக்கூடாது என்று மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பின்னர் சி.ஐ. யிடம் பேசிய பிறகு மீண்டும் நாளை காலை வருவதாக கூறி மனோஜ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Actor Manoj Dharna In Police Station

நடிகர் மோகன் பாபுவின் குடும்பத்தில் சிறிது காலமாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. மனோஜ் தனது சகோதரர் விஷ்ணுவை இலக்காகக் கொண்டு பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

Manchu Manoj Arrest

மேலும் விஷ்ணு தரப்பினர் மோகன் பாபு பல்கலைக்கழகத்தில் முறைகேடுகளைச் செய்து மாணவர்களுக்கு அநீதி இழைத்து வருவதாகவும் மனோஜ் குற்றம் சாட்டுகிறார். இந்தச் சூழலில், ஆரம்பத்தில் ஐதராபாத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சர்ச்சை இருந்த நிலையில் தற்போது திருப்பதியில் நடந்து வருகிறது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Veeram actor Bala அஜித் பட நடிகர் மீது முதல் மனைவி பரபரப்பு புகார்.. 3வது மனைவியுடனும் சிக்கலா?
  • Leave a Reply