என்னை நம்பி ஓடிவந்த மனைவிக்கு நான் செஞ்சது இது தான்… கலங்க வைக்கும் மாரிமுத்துவின் கடைசி பேட்டி!

Author: Shree
8 September 2023, 2:48 pm

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

marimuthu - updatenews360

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தானாகவே காரை ஓட்டிச்சென்று வடபழனி சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது.

இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மாரிமுத்துவின் கடைசி பேட்டி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில் அவர், தன் மனைவி தன்னை நம்பி ஓடி வந்துவிட்டார் என்றும் அவரது நம்பிக்கை இத்தனை வருடங்களுக்கு பின்னர் இப்போ தான் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து பிரபலமான பின்னர் நடந்துள்ளது. என் மனைவி என்னுடன் நிறைய கஷ்டம் பட்டிருக்காங்க. என்னைக்காவது நான் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

இப்போ தான் வாழ்க்கை நாங்கள் எதிர்பார்த்த நிலைக்கு வந்திருக்கிறது. நான் இப்போதான் சந்தோஷமா இருக்கிறேன். பொது இடங்களில் மக்கள் என்னை பார்த்ததும் ஓடி வந்து போட்டோ எடுக்கும்போது நான் என் மனைவி என்னை நினைத்து பெருமைப்படுவதில் மகிழ்ச்சி அடைவேன் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 696

    1

    0