மாரிமுத்துவின் நிறைவேறாத ஆசை.. காலம் இப்படி பண்ணிடுச்சு..! என்ன தெரியுமா அது?
Author: Vignesh8 September 2023, 5:30 pm
பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தானாகவே காரை ஓட்டிச்சென்று வடபழனி சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாரிமுத்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் கூறுகையில் திருமணமாகி 27 வருடங்களாக வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம். இப்போதுதான் சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளேன். சொந்த வீடு என்பது அது ஒரு கனவு மாதிரி மற்ற ஊரிலிருந்து சென்னை வந்து வாழ்பவர்களுக்கு சொந்த வீடு கனவு போன்று தான் இருக்கும். என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது. தற்போது, மணப்பாக்கம் பக்கத்தில் வீடு வாங்கியிருக்கிறேன். அந்த வீட்டிற்கு என்னுடைய மனைவியின் பெயரை வைத்துள்ளேன் என்று மாரிமுத்து தெரிவித்திருந்தார். இப்படி ஆசை ஆசையாய் கட்டிய வீட்டிற்கு அவர் செல்ல முடியாமல் போனது அனைவருக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது.