அஜித் மீசையை எடுக்க மறுத்ததால் வாலி படத்தில் மிஸ் ஆன சூப்பர் சீன்: மாரிமுத்து பகிர்ந்த ரகசியம்..!

Author: Rajesh
23 February 2023, 2:30 pm

நடிகர் ஆகவேண்டும் என்கிற ஆசையோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து, தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்டு வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. பிரபல இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், சபாபதி உள்ளிட்டோருக்கு அசிஸ்டென்ட் ஆக பணியாற்றிய இவர், வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் இவருக்கு கார், பைக் பரிசாக அளித்ததாக தகவல் வெளியானது. எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் அஜித், சிம்ரன், ஜோதிகா, விவேக் உட்பட பலர் நடிப்பில் இப்படம் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வாலி படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து அளித்த பேட்டி வீடியோவில், வாலி படத்தின் ஷூட்டிங்கில் மிஸ் ஆன சூப்பர் சீன் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “வாலி படத்தில் அண்ணன் தம்பி இருவரும் ஒரே மாதிரி இருப்பதால் சிம்ரன் தம்பி அஜித் என நினைத்து அண்ணனை கட்டிப்பிடித்து விடுவார். இதனால் மனமுடைந்த சிம்ரன் கட்டிலில் படுத்திருப்பார். அப்போது முகமுடி அணிந்த ஒரு உருவம் சிம்ரன் இருக்கும் அறையின் கதைவை திறக்கும். சிம்ரனும் அண்ணன் தான் மாஸ்க் போட்டுவிட்டு வந்துவிட்டான் பயந்தபடி இருப்பார்.

அந்த உருவம் மெல்ல நெருங்கி வந்து தன்னுடைய முகமூடியை விலக்கியவுடன், அது அண்ணனா அல்லது தம்பியா என சிம்ரனுக்கு குழப்பமாக இருக்கும். அதற்கு, தன் மனைவிக்கு அண்ணன் யார் தம்பி யார் என்ற குழப்பம் வருவதை தவிர்க்க தம்பி அஜித் மீசையை எடுத்து விட்டதாக கூறுவார். இதனால் சிம்ரனுக்கு பயம் போகும். இதனை அண்ணனிடம் சொல்லலாம் என சென்று காரை துடைத்து கொண்டிருக்கும் அண்ணன் அஜித்தை தம்பி கூப்பிடும் போது திரும்பும் அண்ணன் அஜித்தும் மீசையை எடுத்திருப்பார்.

இந்த காட்சி படத்தில் இருந்திருந்தால் படத்தை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். இந்த காட்சியை அஜித்திடம் சொன்னபோது, மீசையை கடைசியில் எடுத்துக்கொள்ளலாம் என சொன்னார். ஆனால் அவர் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததால் மீசையை எடுக்க முடியாது என கூறிவிட்டார். அந்த சீன் இருந்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்” என கூறியிருந்தார் மாரிமுத்து.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ