RJ-வாக தனது கேரியரை தொடங்கி, 12B திரைப்படத்தில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் மிர்ச்சி சிவா. இதனை தொடர்ந்து, சென்னை 600 028 மற்றும் சரோஜா திரைப்படங்கள் மூலம் மிக பிரபலம் அடைந்தார். அகில உலக சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் இவர் நடித்த ‘தமிழ் படம்’ பெரிய பிரபலம் கொடுத்தது. இவரது நடிப்பில் அடுத்ததாக “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்” என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
லார்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் ஷா இயக்கியுள்ள இப்படத்தில் அஞ்சு குரியன், மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.
ஸ்மார்ட்போன் வைத்து சிவா சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களை காமெடியாக எடுத்துரைக்கும் திரைக்கதை என ட்ரைலர் மூலம் தெரிய வருகிறது. இத்திரைப்படம், பிப்ரவரி 24ம் தேதியன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல சேனலின் பேட்டியில் சிவா & மேகா ஆகாஷ் கலந்து கொண்டபோது, நடிகர் சிவா, விக்னேஷ் சிவன் & நயன்தாரா குறித்து பேசியுள்ளது செம வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது, “ஒருவேளை நான் நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தால் நயன்தாரா அந்த படத்தில் நடித்து இருப்பாங்களானு தெரியாது. நயன்தாரா நடிக்காமல் இருந்தால், விக்னேஷ் சிவனுக்கும் அவங்களுக்கும் காதல் ஏற்பட்டு இருக்குமா தெரியாது.. அவங்க காதலுக்கு நானும் ஒரு காரணம். அதுக்கு அவங்க எனக்கு Thanks சொல்லணும்” என சிவா ஜாலியாக கூறியுள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.