80களில் பிரபலமான ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவர் கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டார்.
தமிழில், எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார்.
பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமை காலங்கள், அன்பே ஓடி வா, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, மௌன ராகம், மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி ஸ்டார் ஹீரோவாக நல்ல அந்தஸ்தை பிடித்தார். இவர் தமிழில் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் மோகனுக்கு பெண் ரசிகைகள் ஏராளம் பேர் இருந்தார்கள். திரைத்துறையை சேர்ந்த அவருடன் நடித்த நடிகைளே அவரை ஒருதலையாக காதலித்தார்கள். ஆம், 80ஸ் காலத்தில் அவருடன் நடித்த நடிகைகளில் ஒருவர், ” நான் உங்களை காதலிக்கிறேன் என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் ” என அவர் பின்னாடியே அலைந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வெறுப்புக்கு ஆளான மோகன் எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. எனது சினிமா வாழ்க்கை நன்றாக செல்கிறது என்னால் அதைத்தாண்டி வேற எதுவும் இப்போதைக்கு யோசிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
இதையடுத்து, தன்னை மோகன் ஏற்றுக்கொள்ளவில்லையே என்ற விரக்தியில் அந்த நடிகை, மோகன் பல நடிகைகளுடன் தகாத உறவில் இருந்து வருவதாகவும், அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கட்டுள்ளார். எனவே, அவருடன் யாரும் நடிக்கவேண்டும் என கூறினாராம். அன்றிலிருந்து மோகனின் வாழ்க்கை அழிந்துவிட்டது. அவர் வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டாராம்.
ஒரு கட்டத்தில் இருக்கிறாரா? இல்லையா? என தெரியாமலே வாழ்ந்து வந்துள்ளார் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். அந்த நடிகை பூர்ணிமா தான் என ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். நடிகர் மோகன் – பூர்ணிமா இருவரும் இணைந்து அந்த சில நாட்கள் என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Luxury கார் வாங்கி குடும்பத்துடன் கொண்டாடிய Sun TV சீரியல் நடிகை – என்ன விலை தெரியுமா?..
தற்போது, சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கும் மோகன் ‘ஹரா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். அது விரைவில் ரிலீஸ் ஆகியுள்ளது. அடுத்ததாக கோட் படத்தில், மோகன் ஒரு ரோலில் நடித்து வருகிறார். முன்னதாக, நடிகர் மோகன் தான் சினிமாவில் இருந்து விலகி இருந்த காலகட்டங்களில் பல்வேறு வதந்திகள் வந்தது எனவும், அவை தன்னை அதிகம் வேதனை படுத்தியது என்றும் தெரிவித்திருக்கிறார். அதில், தனக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது என செய்தி பரப்பி விட்டார்கள். அது, எனக்கும் என் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் பெரிய வேதனையை கொடுத்தது. என்னிடம் வந்து பேட்டி எடுப்பவர்கள் எயிட்ஸ் இல்லை என சொல்லுங்க என கேட்டார்கள். நீங்களே எதையோ எழுதி விடுங்க, அது இல்லை என்று நான் விளக்கம் ற சொல்லனுமா என்று கோபமாக கேட்டு விடுவேன் என்று மோகன் தெரிவித்தார்.
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
This website uses cookies.