நான் எப்பேர் பட்ட ஹீரோ.. விஜய் பட வாய்ப்பை தூக்கி எறிந்த மைக் மோகன்..!
Author: Vignesh1 June 2023, 3:00 pm
80களில் பிரபலமான ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவர் கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டார்.
தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார்.
பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை,இளமை காலங்கள், அன்பே ஓடி வா, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, மௌன ராகம், மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி ஸ்டார் ஹீரோவாக நல்ல அந்தஸ்தை பிடித்தார். இவர் தமிழில் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் மோகனுக்கு பெண் ரசிகைகள் ஏராளம் பேர் இருந்தார்கள். திரைத்துறையை சேர்ந்த அவருடன் நடித்த நடிகைளே அவரை ஒருதலையாக காதலித்தார்கள். ஆம், 80ஸ் காலத்தில் அவருடன் நடித்த நடிகைகளில் ஒருவர், ” நான் உங்களை காதலிக்கிறேன் என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் ” என அவர் பின்னாடியே அலைந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் 2017 -ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்திருப்பார்.
இந்த கதாபாத்திரத்தில் முதலில் இயக்குனர் சாய்ஸ்ஸாக இருந்தது பிரபல நடிகர் மைக் மோகன் தானாம். ஆனால் மைக் மோகன் நடித்தால் ஹீரோவாக நடிப்பேன் என்று தெரிவித்து இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.