அந்த ஒரு வார்த்தை.. “நான் பேச மாட்டேன்.. என் டிகிரி பேசும்”:58 வயதில் சாதித்த முத்துக்காளை.. குவியும் வாழ்த்து..!
Author: Vignesh27 December 2023, 5:30 pm
காமெடி காட்சிகளில் நடிகர் வடிவேலுவுடன் நடித்தவர் முத்துக்காளை கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து விலகி வடிவேல் இருந்ததால் முத்துக்காளை போன்ற துணை காந்தியங்களும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தனர். மேலும், முத்துக்காளை போதைக்கு அடிமையானவர் என தொடர்ந்து பல வருடங்களாக அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், என்னை குடிகாரன் என்று சொல்லி தொடர்ந்து மீடியாவில் செய்திகள் வருகிறது. நான் என்னமோ ஒயின்ஷாப் வாசலிலேயே விழுந்து கிடப்பது போல பேசுகிறார்கள் என முத்துக்காலை தெரிவித்திருந்தார். குடியிலிருந்து மீண்டு வந்த நான் இந்த பெயரை மாற்ற நான் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்து தற்போது மூன்று பட்டங்கள் பெற்றிருக்கிறேன் என முத்துக்காளை பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 58 வயதான முத்துக்காளை 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், வரலாறு படத்தில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும், அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு எம்ஏ தமிழ் படித்து அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது B.Lit தமிழில் தேர்வு எழுதி அதிலும் ஃபர்ஸ்ட் கிளாஸ் இல் தேர்ச்சி பெற்றுள்ளார். சிறு வயதில் இருந்தே பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட முத்துக்காளை தனது கனவை 58 வயதில் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.