பாலியல் தொல்லை: பிரபல இயக்குனர் மீது நடிகர் நகுல் அதிரடி புகார்!

Author:
2 October 2024, 10:56 am

தென் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வரும் நடிகர் நகுல் திரைப்பட பாடகராக இருந்து அதன் பின்னர் ஹீரோவாக அறிமுகமானார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகி இருந்த நகுல் முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

nakkhul

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் சில பல ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த நடிகர் நகுலின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் வாஸ்கோடகாமா . இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றெ சமயத்தில் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய உதவியாளர் இயக்குனர் ஒருவர் நடிகர் நகுல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார் .

அதாவது, வாஸ்கோடகாமா படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனரான சந்துரு இந்த திரைப்படத்தில் நான் பணியாற்றிய போது என்னிடம் காண்டம் வாங்கி வர சொன்னார் நடிகர் நகுல். நான் வேலை இருக்கு முடியாது என்று கூறியும் அவர் இரண்டு முறை கேட்டார். அப்போதும் முடியாது என்றேன்.

nakkhul

இதனால் கோபமான அவர் நான் படப்பிற்கு அவர் வரமாட்டேன் என பிரச்சனை செய்தார். மேலும் என்னை வாஸ்கோடகாமா படத்தின் கடைசி பத்து நாள் படப்பிற்கு அழைக்கவில்லை. என்னுடைய பெயரும் படத்தில் இடம்பெறவில்லை. இதனால் என்னுடைய இரண்டு ஆண்டு உழைப்புகள் வீணாகிப் போனது.

இதையும் படியுங்கள்: என் மகன் ஒரு நேரத்தில் எப்படி இருந்தான் தெரியுமா ? ஜெயம் ரவியின் தந்தை வேதனை!

nakkhul

மேலும் நடிகர் நகுல் படத்தின் .ஹீரோயினுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்ததாகும் அவர் பரபரப்பு புகார் கூறியிருந்தார் இந்த நிலையில் நடிகர் நகுல் இந்த விவகாரம் குறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

உதவி இயக்குனர் சந்துரு மற்றும் நடிகை எந்த ஒருஆதாரமும் இல்லாமல் இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 269

    0

    0