மெகா ஹிட் படத்தை தவறவிட்ட நகுல்.. நான் நடிச்சியிருந்தால் அந்த நடிகர் அட்ரஸே இல்லாமல் போயிருப்பாரு..!

Author: Vignesh
16 May 2024, 2:56 pm

நடிகை தேவயானியின் சகோதரர் நகுல். இவர் பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். பின்னர் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

nakul

கிட்டாரிஸ்ட் அன இவர் பின்னணி பாடகரும் கூட. தற்போது இவர் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு நடுவராக இருந்து வருகிறார். இவர் தன்னுடன் படித்த ஸ்ருதியை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்கள். இவர்களுக்கு அகீரா என்ற பெண் குழந்தையும், அமோர் என்ற மகனும் உள்ளனர்.

nakul

மேலும் படிக்க: கல்யாணம் உண்மைதான்.. ஆனா, அனுஷ்கா கட்டிக்கப் போற மாப்பிள்ளை ‘அவங்க’ இல்லையாம்..!

சமீபத்தில் தன் மனைவி ஸ்ருதியுடன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு சில விஷயங்கள் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார். அதில், ஸ்ருதியை மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் இருந்தும் பார்த்துக் கொள்ளாமல் இருந்தேன். உண்மையாக சொல்லணும் என்றால் ஸ்ருதியை காதலிக்கும் முன்பு மோசமான ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அதுவும் மிகவும் சிக்கலாக இருந்தது. அதன் பின்னர், வேண்டாம் சாமி என்று அவரை விட்டு ஒதுங்கி விட்டேன். நகுலுக்கு இவங்கதான் சரியாக இருப்பார்கள் என்று ஸ்ருதி அமைந்துவிட்டார் என்று நகுல் மனைவி குறித்து பெருமையாக கூறியுள்ளார்.

nakul

மேலும் படிக்க: சங்கீதா வைத்த நைட் பார்ட்டி… விஜய் வீட்டுக்கு முன் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை..!

மேலும், பேசுகையில் எனக்கு ஒரு படத்தின் வாய்ப்பு வந்தது. சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கவில்லை. நான் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால், இன்று ஒரு உச்சத்தில் இருக்கும் நடிகர் சினிமாவில் இருந்திருக்கவே மாட்டார். அந்த அளவுக்கு, முக்கியமான கதாபாத்திரம். ஆனால், யார் அந்த நடிகர் என்பதை நான் சொல்ல மாட்டேன் என்று நகுல் தெரிவித்துள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…