விஜய்யுடன் ஒரு பிரச்சனை நாங்கள் பேசிக்கொள்வதில்லை: ஆனா, முதல்ல இதை பண்ண சொல்லுங்க.. நெப்போலியன் அட்வைஸ்..!

Author: Vignesh
28 ஜனவரி 2023, 5:30 மணி
Quick Share

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்சக்கட்ட நட்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர்.

9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவி வருகிறது. அதன்படி பொங்கல் ரேஸில் அதிக கலெக்‌ஷனை அள்ளியது யார் என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்களுக்குமே இருந்து வருகிறது.

Varisu - Updatenews360

தளபதி விஜய்யை பலருக்கு பிடிக்க காரணம் விஜய்யின் எளிமையான பண்பு. ஆனால் பிடிக்காத ஒன்று, அவர் தனது சொந்த அப்பாவிடம் பேசாமல் இருப்பது தான்.

விஜய்க்கும் அவரின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பேசிக்கொள்வதில்லை இது குறித்து சந்திரசேகரும் பல இடங்களில் கூறியுள்ளார்.

Vijay - Updatenews360

இந்நிலையில் விஜய், நெப்போலியன் போக்கிரி படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தது.

பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெப்போலியனிடம், இதுகுறித்து கேட்கயில், ‘நீங்களும் நடிகர் விஜய்யும் பிரச்சனைகளை மறந்து மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

napoleon - updatenews360

இதற்கு பதில் அளித்த நெப்போலியன், “எனக்கும் விஜய்க்கும் போக்கிரி படத்தில் சண்டை ஏற்பட்டது உண்மை தான். அதன் பின்னர் 15 வருடங்களாக நாங்கள் பேசிக்கொவத்தில்லை. மேலும், நான் விஜய்யுடன் நடந்த பிரச்சனைகளை மறந்து மீணடும் இணைந்து நடிக்க தயார். ஆனால் அதற்கு அவரும் தயாராக இருப்பாரா?. என கேள்வி எழுப்பினார்.

 napoleon - updatenews360

மேலும் அவர், விஜய் தனது சொந்த அம்மா அப்பாவிடம் கூட பேசுவதில்லை. இந்த செய்தி அமெரிக்கா வரை வந்துள்ளது என்றும், இந்த தகவல் முற்றிலும் உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியவில்லை எனவும், முதலில் விஜய், அம்மா அப்பாவிடம் சமரசம் ஆகக்கட்டும்” என்று தெரிவித்திருந்தார்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 549

    1

    2