கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வந்த நெப்போலியன்.. மனைவியோடு கண்கலங்க மரியாதை..!

Author: Vignesh
9 July 2024, 6:14 pm

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு நடிகர் நெப்போலியன் தனது மனைவியுடன் நேரில் மரியாதை.

தமிழ் நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த விஜயகாந்தின் சாலிகிராமம் இல்லத்திற்கு சென்ற நடிகரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நெப்போலியன் தனது மனைவியுடன் சென்ற அங்கு வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விஜயகாந்த் மறைவின்போது அமெரிக்காவில் இருந்த நடிகர் நெப்போலியன் அப்போதே இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகம் வந்த நடிகர் நெப்போலியன் தனது மனைவியுடன் சென்று விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?