மகன் தனுஷுக்கு திருமணம்; மகிழ்ச்சியின் உச்சத்தில் உயர நடிகர்

Author: Sudha
3 July 2024, 4:37 pm

தமிழ் சினிமாவில் வில்லனாக கால் பதித்து அனைவரையும் தன்னுடைய நடிப்புத் திறனால் மிரளச் செய்து ஹீரோவாக மாறியவர் நடிகர் நெப்போலியன்.

இவர் பிறந்தது திருச்சியில். குமரேசன் துரைசாமி என இயற்பெயர் கொண்ட அவர் அவரது நாடகமேடைப்பெயரான நெப்போலியன் என்ற பெயர் மூலம் தொழில் ரீதியாக அறியப்படுகிறார்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராகவும் இருந்தார் . நிறைய தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நெப்போலியன்.சில தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவரை பாரதிராஜா தன்னுடைய புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலமாக தமிழ்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

இவருடைய நடிப்பில் வெளிவந்தசீவலப்பேரி பாண்டி,தசாவதாரம்,எட்டுப்பட்டி ராசா,எஜமான் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.தன் மகனுக்கு இருக்கும் உடல் நல பிரச்சினை காரணமாக அவருடைய சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று அமெரிக்காவிலேயே தங்கி விட்டார் அங்கு தொழிலதிபராகவும் இருக்கிறார்.ஜீவன் டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனத்தை மனைவியுடன் சேர்ந்து நடத்தி வருகிறார்.

இவருக்கு 2 மகன்கள். இவருடைய மூத்த மகன் தனுஷ். அவருக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார் நெப்போலியன். நேற்று முதல்வரை குடும்பத்தினருடன் சந்தித்து தன் மகனுக்கும் அக்ஷயா என்ற பெண்ணுக்கும் நடைபெற உள்ள திருமணத்திற்கான நிச்சயதார்த்த பத்திரிக்கையை வழங்கினார்.

இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் நெப்போலியன்.

https://www.instagram.com/nepoleon_duraisamy/reel/C88J5r7yHFd/?hl=en

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!