இத்தனை வசதிகளா..? மினி தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் பிரபல நடிகரின் பிரம்மாண்ட வீடு…!
Author: Vignesh12 December 2022, 5:00 pm
நெப்போலியன் தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த தற்போது அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தனியாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். நெப்போலியன், தனது மகன் தனுஷுக்காக அமெரிக்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியன் அவரது வீட்டின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
நெப்போலியன் 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஆறடிக்கும் மேல் உயரம், கம்பீரமான ராஜநடை, முறுக்கு மீசை என பக்கா கிராமத்து மெட்டீரியலாக திரையுலகில் அறிமுகமான நெப்போலியன், போலீஸ் கேரக்டர்களுக்கும் அம்சமாக பொருந்திப் போனார்.
நெப்போலியன் ஹீரோ, வில்லன் கெஸ்ட் ரோல் என வலம் வந்த ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்திருந்தார். நெப்போலியனுக்கு கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்கள் தரமான கம்பேக் கொடுத்தன.
அதேபோல், நெப்போலியன் கமலுடன் விருமாண்டி, தசாவதாரம் படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இறுதியாக கார்த்தியுடன் நடித்த சுல்தான் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனிடையே சினிமா, அரசியல் என பயணித்துக் கொண்டிருந்த நெப்போலியன், ‘ஜீவன் டெக்னாலஜிஸ்’ என்ற பெயரில் ஐடி நிறுவனமும் நடத்தி வருகிறார்.
நெப்போலியனின் ஐடி நிறுவனம் சென்னை, அமெரிக்கா என இரு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நெப்போலியன் தனது மகன் தனுஷின் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சென்று செட்டில் ஆனார்.
பல வருடங்களாகவே அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனின் வீட்டின் வீடியோ பிரபல யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. அமெரிக்கா ஹவுஸ் டூர் என்ற இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுமார் 12 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அந்த வீடு, அரண்மனை போல காட்சியளிக்கிறது. மிகப் பெரிய லிவிங் ஹால், இரண்டு டைனிங் ஹால் என வீட்டின் முதல் பகுதியே பிரமிக்க வைக்கிறது. அதேபோல், வீடு முழுவதும் மகன் தனுஷின் வசதிக்காக ரிமோட் சிஸ்டம், லிஃப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நெப்போலியனின் வீட்டின் உள்ளே மினி ஹோம் தியேட்டர் ஒன்றும் உள்ளது. அதனுள்ளே நெப்போலியன் நடித்த படங்களில் இருந்து அவரது புகைப்படங்கள் ஃபிரேம் செய்யப்பட்ட போஸ்டர்களாக மாட்டப்பட்டுள்ளன. அதேபோல், ரியல் பார் செட்டப் ஒன்றையும் வீட்டில் அமைத்துள்ளார் நெப்போலியன்.
நெப்போலியன் விலையுயர்ந்த மதுபானங்களுடன் இருக்கும் இந்த பாரும் வியக்க வைக்கிறது. மேலும், பேஸ்கெட் பால் பிளேயரான நெப்போலியன் வீட்டினுள்ளே மிகப் பெரிய பேஸ்கெட் பால் கோர்ட்டையும் உருவாக்கியுள்ளார். இந்த வீட்டின் மிகப் பிரம்மாண்டமான விசயமே இதுதான் எனத் தெரிகிறது.
அதுமட்டும் இல்லாமல் நெப்போலியனின் அழகான ஸ்விம்மிங் பூல், ஜிம் என சகல வசதிகளுடனும் நெப்போலியனின் வீடு பிரமிக்க வைக்கிறது. வீடு முழுவதையும் நெப்போலியனே சுத்திக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். மேலும், மகனுக்காக நெப்போலியன் செய்துள்ள இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.