விஜயகாந்த் ஒரு விஷத்தில் கவனத்தை தவறவிட்டுட்டார் – வெளிப்படையா சொன்ன நெப்போலியன்!

Author: Rajesh
30 December 2023, 6:44 pm

நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ நுரையீரல்‌ அழற்சி காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர்‌ ஆதரவுடன்‌ சிகிச்சை பெற்றிருந்தார்‌. மருத்துவ பணியாளர்களின்‌ கடின முயற்சி இருந்தபோதிலும்‌ அவர்‌ நேற்று முன்தினம் காலை 28 டிசம்பர்‌ 2023 காலமானார்‌.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வரலாறு பேசும் அளவுக்கு அவரது இறுதி ஊர்வலம் பலகோடி மக்கள் கூடி வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில் விஜயகாந்த் செய்த உதவிகளும் அவரது நற்பண்புகளும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜகாந்த்தின் இறப்பிற்கு வீடியோ மூலம் அஞ்சலி செலுத்திய நடிகர் நெப்போலியன், ஒரு விஷயத்தில் விஜயகாந்த் கவனம் தவறிவிட்டார். ஆம், அவர் உடல் நிலையை கவனிக்காமல் வேலை வேலைன்னு ஓடிக்கொண்டிருந்ததால் சீக்கிரம் மரணமடைந்துவிட்டார். நிச்சயம் முதலமைச்சர் ஆகவேண்டிய அத்தனை தகுதிகளும் அவருக்கு இருந்தது. கடைசியில் அவரது இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடந்து கொஞ்சம் ஆறுதல் அளித்தது என கூறினார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 559

    1

    0