4-வது திருமணத்தை செய்யவே விடமாட்டிங்கறா : 3-வது மனைவி மீது பிரபல நடிகர் கொடுத்த வழக்கு..!

Author: Vignesh
30 January 2023, 3:30 pm

சென்னை தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா-. இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகருமும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷை காதலித்து திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தகவல் பரவியது. நரேஷும் 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆனவர். 3வதாக ரம்யா ரகுபதி என்பவரை மணந்து அவரையும் சமீபத்தில் விவாகரத்து செய்து உள்ளார்.

இந்த நிலையில் நரேஷும், பவித்ராவும் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த போது, 3வது மனைவியான ரம்யா ரகுபதி அங்கு சென்று அவர்கள் இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார். அப்போது, போலீசார் குறுக்கிட்டு, அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

பவித்ரா லோகேஷ் சினிமாவில் அம்மா வேடங்களுக்கு புகழ்பெற்றவர். இவர் பல படங்களில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் 2018ஆம் ஆண்டு ‘சம்மோகனம்’ படப்பிடிப்பின் போது சந்தித்தனர். இருவரும் நெருங்கிய உறவை வளர்த்து கொண்டனர்.

நரேஷ், பவித்ரா லோகேஷ் இருவரும் ‘அண்டாரு பாகுந்தலி அந்துல நேனுந்தலி’, ‘மிடில் கிளாஸ் அப்பா’, ‘ஹேப்பி வெட்டிங்’, ‘ராமராவ் ஆன் டூட்டி’ உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். நடிகர் நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக சமீபத்தில் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.

இந்த நிலையில், நரேஷ் தனது 3வது மனைவி தன்னை கொலை செய்யும் அளவிற்கு வந்துள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

  • Aadukalam movie casting controversy என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!