நடிகர் நாசர் வீட்டில் முக்கிய நபர் காலமானார் – உருகுலைந்துப்போன குடும்பம்..!

Author: Vignesh
10 October 2023, 5:21 pm

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், காமெடியன் என பல கதாபாத்திரங்களில் நடித்து முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகர் நாசர். இவர் குணச்சித்திர நடிகராக இருந்து மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். தற்போது நடிகர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.

nassar - updatenews360

நாசர் தற்போது சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக உயர்ந்திருந்தாலும், ஆரம்பத்தில் அவரது அப்பா ஆசைக்காகத்தான் நடிப்பு பயிற்சி பெற சென்று, அதன் பின் தான் நடிகராக வாய்ப்பு தேடினார்.

nassar - updatenews360

தான் சினிமாவில் நடிக்க வரவேண்டும் என்ற பெரிய எண்ணம் இல்லை என்றும், ஆனால் சூழ்நிலை தன்னை மாற்றிவிட்டதாகவும், தன் தந்தைக்கு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பெரிய விருப்பம் இருந்ததாகவும், ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

nassar - updatenews360

இதனிடையே, நாசரின் அப்பா மாபு பாஷாவுக்கு 95 வயதாகும் நிலையில், இன்று உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார். அவர் செங்கல்பட்டில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்திருப்பதாகவும் இதனால், நாசர் குடும்பம் தற்போது துயரத்தில் மூழ்கியுள்ளது. இவர்களுக்கு திரைத்துறையினர் பலரும் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Nayanthara Vs Meenaபில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!