திருமணம் முடிந்ததை மீண்டும் அடையாளப் படுத்திய நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி.? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

Author: Rajesh
2 April 2022, 1:40 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. இந்த ஜோடி அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வரும்.

இதுவரையில், இருவரும் அவர்களது திருமணம் குறித்து சரியான தகவல் எதுவும் கூறாமல் மௌனம் காத்து வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றது இந்த ஜோடி. அங்கு எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவியது. அந்த வீடியோ இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

நயன்தாரா உச்சந்தலையில் குங்குமம் வைத்திருந்தார். , திருமணம் ஆன பெண்கள் மட்டுமே அந்த இடத்தில் குங்குமம் வைக்கும் நிலையில் நயன்தாரா குங்குமம் வைத்திருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மீண்டும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி, கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. அந்த புகைப்படங்களிலும் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பது போன்ற அடையாளங்கள் இருக்கின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா என்ற சந்தேகம் மேலும் எழுந்துள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!