பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து, ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, காவிய தலைவன், அரண்மனை 2, எனக்குள் ஒருவன், அவள், அருவம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது சில பாடல்களையும் பாடியுள்ளார்.தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது எதாவது கருத்து பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சிறப்பாக இருந்தாலும் ஏனோ அந்தப் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் இருந்தது. கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு தமிழில் அருவம் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.அதை தொடர்ந்து இவர் கமல் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் ஹிந்தியிலும் ஒரு வெப் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2003இல் மேக்னாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்து பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருகிறார் .
கடைசியாக டக்கர் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ப்ரமோஷன் நேர்காணலில் அப்படத்தின் பாடலுக்கு இளம் பெண்கள் அவருடன் டூயட் பாட ஆசைப்பட்ட நடனமாடிய வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஆயுத எழுத்து படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா குறித்து நடிகர் சித்தார்த் பகிர்ந்துள்ளார். இருவரும் ஆயுத எழுத்து படத்தில் கடற்கரை மணலில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு முத்தக்காட்சியில் நடித்திருப்பார்கள்.
அந்த காட்சியால் யாரும் மகிழ வேண்டாம் என்றும், கொளுத்தும் வெயிலில் கடற்கரை மணலில் அந்த காட்சி படமாக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் தான் ஹீரோவாக மட்டுமில்லாமல் அந்த படத்தின் உதவி இயக்குனராக இருந்ததாகவும், கடற்கரை காட்சியில், இருவரின் முகம் எப்படி இருக்க வேண்டும் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் காட்சியாக அந்த காட்சி அமைய வேண்டும் என்று மணிரத்தனம் மிகவும் சிரமம் பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ரொமான்ஸ் பண்ணுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். அப்படத்தை தொடர்ந்து த்ரிஷாவுடன் படு மோசமான ரொமான்ஸ் காட்சிகளில் அரண்மனை 2வில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.