மடிப்பிச்சை ஏந்திய நடிகர் பார்த்திபன்: அதுவும் யாருக்காக தெரியுமா..?குவியும் பாராட்டுக்கள்..!

Author: Vignesh
21 January 2023, 3:32 pm

சினிமாவில் ஏதோ படங்கள் எடுக்க வேண்டும் என்று இல்லாமல் வித்தியாசமாக இதுவரை யாரும் முயற்சி செய்யாத விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு பார்த்திபன் படங்களை எடுப்பவர்.

பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தது, இப்போது அடுத்த படத்தின் வேலைகளில் படு பிஸியாக பார்த்திபன் இருக்கிறார். ஆனால் இதுவரை படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை.

parthiban - updatenews360

இதனிடையே, சென்னையில் 46-வது சர்வதேச புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6-ம் தேதி தொடங்கியது.

சர்வதேச புத்தக கண்காட்சிக்கு வந்த நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி ஒவ்வொரு அரங்காக சென்று மடிப்பிச்சை கேட்டு புத்தகம் பெற்றுள்ளார்.

பார்த்திபனின் இந்த செயல் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

parthiban - updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 474

    3

    1