5000- புரோபசல் வந்துச்சு.. ஆனா, சிங்கிளாக இருப்பது குறித்து பிரபாஸ் Open Talk..!

Author: Vignesh
9 April 2024, 1:34 pm

தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் அடையாளமின்றி இருந்த பிரபாஸுக்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் அவர் உலகம் முழுக்க பேமஸ் ஆனார். அந்த படத்தில் இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்தார்.

மேலும் படிக்க: தொட்டதெல்லாம் ஹிட்டு.. குவியும் துட்டு.. பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்த AR ரகுமான்..!

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பல கோடி போட்டு அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் படையெடுத்து வந்தார்கள். அதன் பின்னர் சாஹோ, போன்ற படங்கள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டும் தோல்வியடைந்தது. அதையடுத்து ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்த அந்த திரைப்படமும் அட்டர் பிளாப் ஆனது.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

அடுத்ததாக சலார் படத்தில் நடித்து வெற்றியை ருசித்த பிரபாஸ் தற்போது, பேட்டியில் திருமணம் குறித்து, பேசும்போது பாகுபலி படத்தை முடித்தவுடன் அந்த சமயத்தில் தனக்கு ஐந்தாயிரம் ப்ரொபோசல் வந்தது. அதை பார்த்து நான் குழம்பி விட்டேன் எனவும் அம்மாவின் விருப்பப்படி கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் கண்டிப்பாக அது காதல் திருமணம் தான் என்று தெரிவித்துள்ளார்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!