“நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ” – இதுல தலையிட மாட்டேன்.. ஒதுங்கிகொண்ட பிரபு தேவா..!

Author: Vignesh
10 March 2023, 6:00 pm

நடன இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபு தேவா தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டு அசத்தி வருபவர். ஆரம்ப காலத்தில் தனது நடனத்தால் ரசிகர்களை புல்லரிக்க செய்த நடிகர் பிரபுதேவா, தற்போது ஹீரோவாக ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகிறார்.

prabhu deva - updatenews360

நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த போக்கிரி திரைப்படம் விஜய்யின் கேரியரில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. அந்தவகையில், போக்கிரி படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பிரபுதேவா விஜய் கூட்டணியில் மீண்டும் உருவான வில்லு திரைப்படம் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியது.

prabhu deva - updatenews360

நடன இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபு தேவா நடிப்பு ஒரு பக்கமும், நடனம் ஒரு பக்கமும் தனது முழு நேரத்தை செலவழித்து வருகிறார். தற்போது பிரபுதேவா நடிப்பில் வெளியான பகீரா படத்தை பார்த்த ரசிகர்கள் படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

prabhu deva - updatenews360

இதனிடையே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரபுதேவா தனது மகன்களை குறித்து பேசி இருந்தார். அதாவது இதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது மகன் தன்னிடம் சினிமாவுக்குள் வர ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்து இருந்ததாகவும், தன் மகன் அப்படி கூறியதை கேட்டவுடன் தான் ஷாக் ஆகிவிட்டதாகவும், ஏனென்றால் சினிமா லேசு பட்ட காரியம் கிடையாது என்று பிரபு தேவா ஒரு மேடையில் தெரிவித்து இருந்தார்.

prabhu deva - updatenews360

தற்போது இதனை கேள்வியாக தொகுப்பாளர் பிரபு தேவாவிடம் கேட்டதற்கு பதில் அளித்த அவர் தான் எந்த அட்வைஸ்-ம் கொடுக்க மாட்டேன் என்றும், அடிச்சுப்பிடிச்சு அவங்களா தான் மேல வரணும் என தெரிவித்துள்ளார்.பிரபுதேவா பேசியதை வைத்து பார்க்கும் பொழுது கூடிய விரைவில் அவரின் மகன்கள் வெள்ளித்திரைக்கு வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

prabhu deva - updatenews360
  • Actor Soori new film Maaman update பாலா சிஷ்யன் பாணியில் சூரி.. பிரபல நடிகையுடன் வெளியான முக்கிய அப்டேட்!
  • Views: - 670

    1

    0