நடிகர் பிரபுவுக்கு என்ன ஆச்சு…திடீர் அறுவைசிகிச்சையால் பரபரப்பில் கோலிவுட்..!

Author: Selvan
6 January 2025, 12:50 pm

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவரான சிவாஜிகணேசனின் மகன் நடிகர் பிரபு.இவர் கிட்டத்தட்ட 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தார்.

இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்களை கவர்ந்து வருகிறார்.சமீபத்தில் இவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் அதனை லேசர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.

Prabhu brain surgery treatment

இந்த நிலையில் நடிகர் பிரபு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல்,சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.அவருக்கு என்ன ஆச்சு என சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,அவருக்கு மூளையில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையும் படியுங்க: தீவிர சிகிச்சையில் கங்கை அமரன்… திடீர் உடல்நலம் மோசமடைந்ததால் பரபரப்பு!!

இதனால் மூளையில் தற்போது அறுவைசிகிச்சை முடிந்து,நலமுடன் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!