பிரபு NO சொன்ன கதை.. யோசிக்காம நடித்து கொடுத்த விஜயகாந்த்.. கடைசியில் அந்த படம் சூப்பர் ஹிட்..!
Author: Vignesh11 மே 2024, 6:26 மணி
மதுரை மாவட்டம் விருதுநகரில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ந் தேதி பிறந்தவர் தான் விஜயகாந்த். இவரது நிஜப்பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த்தாக மாறினார். தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார்.
இதனிடையே, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
பொதுவாக, திறமையான நடிகராக கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.
மேலும் படிக்க: சாப்பாடு விஷயத்தில் கடுப்பாக்கிய வனிதா.. திருமணத்தை குறிப்பிட்டு Nosecut செய்த பிரியங்கா..!
பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர். விஜயகாந்தின் மூத்த மகன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இரண்டாம் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் படிக்க: பிரபல நடிகையால் சுந்தர் C குடும்பத்தில் வெடித்த சண்டை.. கடுப்பில் கத்திய குஷ்பூ..!
இந்நிலையில், விஜயகாந்த் மறைவிற்குப் பின்னர் அவரது நினைவிடத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒரு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில், விஜயகாந்த் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெகார்ட் சார்பில், உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகில் முதல் நினைவுச் சின்னமாக விஜயகாந்த் நினைவு சின்னம் போற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
— DMDK Social Media (@DMDKsocialmedia) May 3, 2024
இந்நிலையில், விஜயகாந்த் குறித்து பலரும் பல்வேறு சுவாரசியமான சம்பவங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தனக்கு இக்கட்டான சூழ்நிலையில் கை கொடுத்தார் என்று எஸ் ஏ சந்திரசேகர் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டறை படம் குறித்து பேசி உள்ளார்.
அதில், அவர் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் கதையை முதன் முதலில் நடிக்க பிரபுவிடம் கூறினேன். ஆனால், அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை. அதன் பின்னர், பெங்களூருவில் இருந்து ஒருவரை வரவழைத்து மூன்று முறை டெஸ்ட் ஷூட் எடுத்து பார்த்தேன். ஆனால், அவரும் அந்த கதைக்கு செட்டாகவில்லை. கடைசியில் தான் விஜயகாந்த் கை கொடுத்தார். இந்த படத்தில் ஒப்பந்தமானார் என்று எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
0
0