எத்தனை பெண்கள் கூட இருந்தாலும் கண்ணியமாக நடந்துக்கொள்ளும் ஒரே ஆண்மகன் – வீடியோ!

Author:
8 August 2024, 1:22 pm

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நட்சத்திர நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகர் பிரஷாந்த். பின்னர் திடீரென சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் அடையாளமே இல்லாமல் போய்விட்டார். பிரசாந்த் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கே இருக்கிறார்? என ரசிகர்களே கேட்கும் அளவிற்கு சினிமாவில் ஆளே இல்லாமல் போனார்.

பின்னர் பல வருடங்கள் கழித்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார் நடிகர் பிரசாத். தற்போது விஜய்யுடன் “கோட்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இது தவிர நடிகர் பிரசாந்த் அந்தகன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஆன ஆயிஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்த “அந்தாதூன்” படத்தின் தமிழ் ரீமேக் தான் “அந்தகன்” திரைப்படம். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 9ம் ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்து கொண்டு வரும் நடிகர் பிரசாந்த்….சிம்ரன் மற்றும் பிரியா ஆனந்த் உடன் விமானத்தில் செல்லும்போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் எத்தனை பெண்கள் சூழ்ந்துகொண்டு இருந்தாலும் மனதை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ளும் ஒரே ஆண்மகன் பிரசாந்த் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 251

    0

    0