துரோகத்தால் தலைகீழாக மாறிய நடிகர் பிரசாந்த்தின் வாழ்க்கை.. இவங்க தான் காரணமா..? மனமுடைந்த குடும்பம்..!

Author: Vignesh
7 March 2023, 11:30 am

தமிழ் திரையுலகில் விஜய் – அஜித்தை விட 90ஸ் காலகட்டத்தில் டாப்பில் இருந்தவர் நடிகர் பிரசாந்த். 1990ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், ஆரம்ப காலகட்டங்கள் முதல் நிறைய வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய், ஷாலினி, சிம்ரன், ஜோதிகா என டாப் ஹீரோயின்கள் ஜோடியாக நடித்து ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த இவர், திடீரென மார்க்கெட்டை இழந்து ஃபீல்ட் அவுட் ஆனதற்கான ஷாக்கிங் காரணம் இதுதானாம். அதாவது அவருடைய திருமண வாழ்க்கை தான் காரணம் என சொல்லப்படுகிறது.

2005ம் ஆண்டு கிரகலட்சுமி என்பவருடன் நடிகர் பிரசாந்துக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது பிரசாந்த் அவர்களின் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இதனால் பிரசாந்த் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடந்தது. பின்னர், கடந்த 2009ம் ஆண்டு, பிரசாந்த் அவர்கள் கிரகலட்சுமியை விவாகரத்து செய்தார்.

இந்த சம்பவத்தினால் பிரசாந்தின் குடும்பம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி போயுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் தான், பிரசாந்தால் சினிமாவில் சரியாக காசன்ட்ரேட் செய்ய முடியவில்லை என்றும், அவரது சினிமா வாழ்க்கையும் தலைகீழாக மாற முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது குறித்து, சினிமா சார்ந்த Youtube சனல் ஒன்றிற்கு பேட்டியளித்த செய்யாறு பாலு நம்பிக்கை துரோகத்தின் உச்சத்தால் தான் பிரசாந்தால், சரியாக திரையுலகில் சாதிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சமீபகாலமாக பிரசாந்தின் படம் குறித்த போஸ்டர் மட்டும் தான் வெளியாகிறது. ஆனால் படம் வெளியாகவில்லை என கலாய்க்கிறாங்க என்றும், அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க எனக் கேட்டதற்கு பதிலளித்த செய்யாறு பாலு, அவருடைய அந்தகண் படம் ரிலீசாகப்போகின்றது. அது பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

andhagan - updatenews360

மேலும், அந்த படம் பெரும் வெற்றி பெற்று மீண்டும் பிசியான ஒரு நடிகராக நடிகர் பிரசாந்த் மாறலாம் எனவும், சினிமாவில் எது வேண்டும் என்றாலும் நடக்கும் என அவர் தெரிவித்தார்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?