என் வாழ்க்கையை நாசம் பண்ணது அவர் தான்… பல வருட ரகசியத்தை உடைத்த பிரசாந்த்!

Author:
31 July 2024, 6:28 pm

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நட்சத்திர நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகர் பிரஷாந்த். பின்னர் திடீரென சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் அடையாளமே இல்லாமல் போய்விட்டார். பிரசாந்த் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கே இருக்கிறார்? என ரசிகர்களே கேட்கும் அளவிற்கு சினிமாவில் ஆளே இல்லாமல் போனார்.

பின்னர் பல வருடங்கள் கழித்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கி வருகிறார் நடிகர் பிரசாத். தற்போது விஜய்யுடன் “கோட்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இது தவிர நடிகர் பிரசாந்த் அந்தகன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஆன ஆயிஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்த “அந்தாதூன்” படத்தின் தமிழ் ரீமேக் தான் “அந்தகன்” திரைப்படம். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 9ம் ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்து கொண்டு வரும் நடிகர் பிரசாந்த்திடம் கலா மாஸ்டர் பேட்டி ஒன்றில், ” உங்களுடைய படத்தின் கதைகளை கேட்பது நீங்களா? அல்லது உங்களுடைய அப்பாவா? என கேள்வி கேட்டார்.

அதற்கு பிரசாந்த் எல்லா படத்தின் கதைகளையும் நானே தான் கேட்பேன். அதில் ஏதேனும் எனக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றம் செய்ய விருப்பப்பட்டால் அதை என் அப்பாவிடம் சொல்லி இதை இயக்குனரிடம் சொல்லி மாற்றுங்கள் என சொல்லி விடுவேன். உடனே என்னுடைய அப்பா இயக்குனருக்கு போன் செய்து இந்த கதை பிரசாந்துக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், எனக்கு இந்த போர்ஷன் பிடிக்கவில்லை. இதை மட்டும் மாற்றுங்கள் என இயக்குனர்களிடம் கேட்டு தன் மீதே பழி போட்டுக் கொள்வார் .

இதனால் பிரசாந்தின் வாழ்க்கையை காலி செய்தது என்னுடைய தந்தை தான் என பலர் பேட்டிகளில் கூறியும் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டுவிட்டார்கள். ஆனால், உண்மையில் என்னுடைய தந்தை தான் என்னுடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காக இருந்தார். அவர் எப்போதும் என்னை பற்றி தான் யோசித்து கொண்டு இருப்பார். இப்போது கூட என்னைப்பற்றி தான் நினைத்துக் கொண்டிருப்பார். எனவே என்னுடைய வாழ்க்கையின் நாசம் செய்ததோ என்னுடைய சினிமா கெரியரை காலி செய்ததோ என் அப்பா இல்லை… முழுக்க முழுக்க நானே தான் காரணம் என பிரசாந்த் கூறி இருக்கிறார்.

  • Kannada superstar Shivrajkumar cancer recovery நான் உயிரோட இருக்க காரணம் என் மனைவி தான்…நடிகர் சிவராஜ்குமார் உருக்கமாக பேசிய வீடியோ வைரல்..!
  • Views: - 254

    0

    0