தமிழ் சினிமாவில் பிரபலமான இளம் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி. இவர் பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் .
அண்மையில் பிரேம்ஜி சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 47 வயசு வரை திருமணம் செய்யாமல் இருந்த பிரேம்ஜி அமரனுக்கு திருமணமே நடைபெறாது என எதிர்பார்த்த சமயத்தில் காதல் திருமணம் எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
பிரேம்ஜி தற்போது மனைவியோடு மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் தனது மாமியார் துவங்கி இருக்கும் புதிய பிஸினஸிற்கு ஊக்கமளித்து வருகிறார். ஆம் ‘பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா” என்ற பெயரில் புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மாமியார் ஷர்மிளா, மருமகன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்… எங்கள் சொந்த ஊர் சேலம். மிகப்பெரிய குடும்பம் எங்களது. இதனால் தினமும் சமைக்கிறதே கல்யாண வீட்டுக்கு சமைக்கிற மாதிரி இருக்கும்.என்னோட மாமியார் அடிக்கடி சொல்லுற ஒரே விஷயம் சமையல் ரொம்ப ருசியா வர வேண்டும் என்றால் மசாலா தான் முக்கியம்னு சொல்லுவாங்க.
இதனால நாங்க எந்த ஒரு மசாலாவும் கடையில வாங்கவே மாட்டோம்.எல்லாமே வீட்டிலேயே நாங்களே தயார் பண்ணிடுவோம். இதனால எங்க வீட்ல குழம்பு ரொம்ப சுமையா இருக்கும். இதை என்னோட பொண்ணு பிரேம்ஜி அமரன் கிட்ட சொல்லி இருக்காங்க. உடனே பிரேம்ஜி இதை ஒரு பிசினஸா நம்ம பண்ணலாமே என்று சொல்லி எங்களுக்கு ஊக்கம் கொடுத்தார். அதை ஆரம்பிப்பதற்கு தேவையான வழிகளையும் செய்து கொடுத்தார். அதனால்தான் “பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா” என்று என் மருமகன் பெயரையும் சேர்த்து வைத்து விட்டோம் என அவர் கூறியிருந்தார்.
முன்னதாக பிரேம்ஜியின் பேட்டிகளை பார்த்துகிட்டு இப்படி ஒருத்தருக்கு பொண்ணு கொடுக்கணுமா அப்படின்னு நான் ரொம்பவே சந்தேகப்பட்டேன்… எங்களுக்கு மனசே சரியில்ல… பிறகு அவரோட பழகி பார்த்த பிறகு தான் தெரிஞ்சது அவர் ரொம்ப தங்கமான மனசு அப்படின்னு. அவரு பெரியவங்கள ரொம்ப மரியாதையாக நடத்துவாரு .
என்னுடைய மகன் என்னை வீட்ல ஏதாச்சும் வேலை செய்ய சொன்னாவே உடனே பிரேம்ஜி… தம்பி அதையெல்லாம் ஏன் அவங்கள செய்ய சொல்ற? என்று கோபப்படுவார். அந்த அளவுக்கு அவர் ரொம்ப தங்கமான மனுஷன். அவரு எனக்கு மருமகன் இல்லை இன்னொரு மகன் என்றும் மாமியார் ஷர்மிளா மிகவும் எமோஷ்னலாக அந்த பேட்டியில் பேசியிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்ஸ்…. பிரேம்ஜிக்கு பொண்ணு கொடுத்து இருக்கவே கூடாது அப்படின்னு யோசிச்ச மாமியாரை அதுக்குள்ள இப்படி மாத்தி வச்சிட்டாரே. என வருகிறார்கள்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.