ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு.. குழந்தைக்கு பெயர் சூட்டிய ராகவா லாரன்ஸ் : செல்பி எடுக்க கூட்டம் திரண்டதால் பரபரப்பு..!!
பிரபலங்கள் தங்கள் ரசிகர்களைப் பொதுவெளியில் சந்திக்க செல்லும் போது அவர்கள் மீதுள்ள அன்பால் புகைப்படம் எடுக்க நெருங்கிச் செல்வார்கள். அப்போது கூடும் கூட்டத்தால், தள்ளுமுள்ளு, அடிதடி என பல அசம்பாவிதங்கள் ஏற்படுவதுண்டு. அப்படித்தான் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ‘சந்திரமுகி2’ பட விழாவில் ஒரு சம்பவம் ஏற்பட்டது.
அதாவது, சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவைக் காண சென்றிருந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் பவுன்சர்கள் அந்த மாணவரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது எனக் கூறி நடிகர் ராகவா லாரன்ஸூம் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டார். இதுபோல அவரைச் சந்திக்க வந்த ரசிகர் ஒருவர் விபத்தில் மாட்டி இறந்து இருக்கிறார்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நேரடியாக சென்று ரசிகர்களுடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள விழுப்புரத்தில் இருந்து தொடங்குகிறேன்’ என அவர் கூறியுள்ளார்.
அதன்படி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று ரசிகர்களுடன் போட்டோ ஷூட் எடுத்து கொண்டார் அப்போது பலர் இடம் நான் ரசிகர்களுடன் போட்டோ ஷூட் மட்டுமே எடுத்து கொள்ள வந்துள்ளேன் வேறு ஒன்றுமில்லை என்றார்.
பின்னர் அனைத்து ரசிகர்கள் உடனும் அவர்கள் குடுப்பத்தினர் உடன் போட்டோ எடுத்து கொண்டார். ஒரு பெண் குழந்தைக்கு லாவண்யா என பெயர் சூட்டி அந்தக் குழந்தைக்கு குங்குமம் போட்டு வைத்து ஆசீர்வதித்தார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.