ரகுவரனின் மகனா இது…? ஹேண்ட்ஸம் Look’ ல் ஆள் பயங்கரமா இருக்காரே!
Author: Rajesh22 December 2023, 5:56 pm
வில்லன், ஹீரோ, குணசித்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி திறமையால் மக்களை வியக்க செய்தவர் நடிகர் ரகுவரன். இவர் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்து தந்தையின் தொழிலுக்காக தமிழ்நாட்டில் குடும்பத்தோடு குடிபெயர்ந்தார்.
நல்ல உயரம், தோற்றம் என கம்பீரமாக இருந்த ரகுவரனுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.அதை தொடர்ந்து கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படம் மாபெரும் ஹிட் அடித்து யார் இந்த நடிப்பு அரக்கன் என உலகம் முழுக்க உள்ள ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.
தமிழ் மட்டும் இன்றி இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தனது முதல் மலையாள திரைப்படமான “காக்கா” என்ற படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ரோஹிணியை காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறான். அதன் பின்னர் ரோகினி உடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அவரை 2004ம் ஆண்டு விவாகரத்து செய்துபிரிந்துவிட்டார். விவாகரத்துக்கு பின் அவர் மிகவும் தனிமையில் வாடினாராம்.
அந்த நேரங்களில் சரியாக படங்களில் கூட கவனம் செலுத்தாததால் சில ஆண்டுகள் கேப் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் தனிமையை போக்க குடிபோதைக்கு அடிமையாகி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
ஒரு முறை சிக்கனலில் ஒரு சிறுவன் பிச்சை எடுப்பதை பார்த்து, இது தன் மகனோ? தான் மனைவியையும் மகனையும் விட்டுசென்றதால் தான் இந்த நிலைக்கு வந்திட்டேனோ? என்றெல்லாம் பயந்து போன் பண்ணி விசாரித்தாராம். அந்த அளவிற்கு தனிமை அவரை மனரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது. இதனிடையே போதை பழக்கத்திற்கு அடிமை ஆனதால் உடல்ரீதியாக பிரச்சனை ஏற்பட்டு நலிவிழந்து 2008ம் ஆண்டு மறைந்துவிட்டார்.
இந்நிலையில் ரகுவரனின் மகன் ரிஷி அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹேண்ட்ஸம் லுக்கில் ஆளே ஹீரோ மாதிரி இருக்கும் அவரை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் அட ரகுவரனின் மகனா இது? என வியப்புடன் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர்.