1996-லயே PAN INDIA படம் எடுத்தவன் நான்.. நீ ரொம்ப லேட்.. இந்தி குறித்த கேள்விக்கு பாட்டு பாடி பதில் கொடுத்த TR…!!

Author: Babu Lakshmanan
20 January 2023, 9:02 pm

நடிகரும், இயக்குநரும், இசையமைப்பாளருமான டி.ஆர். ராஜேந்தர் ‘வந்தே வந்தே மாதரம்’ என்ற தனியிசைப் பாடலை தனது டி.ஆர்.ரெக்கார்ட்ஸ் மூலமாக தமிழ் மற்றும் இந்தியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். இதில் அவரது பேரன் ஜேசனை பாடகராகவும், நடிகராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் பாடல் வெளியீட்டு விழா குறித்தான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அப்போது, பேசிய டி.ராஜேந்தர் ;- இன்று என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான நாள். உணர்ச்சிவசப்படக் கூடியவன் தான் நல்ல மனிதன். இயக்குநர், இசையமைப்பாளர் என பல படங்களுக்கு ப்ளாட்டின டிஸ்க் வாங்கி இருக்கிறேன். ட்யூன் பேங்க்காக ஆயிரக்கணக்கான பாடல்களை வைத்துள்ளேன். இந்த பாடல்களை வெளியிட டி.ஆர். ரெக்கார்ட்ஸ் ஆரம்பித்துள்ளேன்.

இதன் மூலம் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதில் முதல் பாடலாக ‘வந்தே வந்தே மாதரம்’ பாடலை என் தாய்மொழி தமிழ் மற்றும் இந்தியில் வெளியிட்டுள்ளேன். மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ‘மோனிஷா என் மோனலிசா’ படத்தை இந்தியில் எடுத்து பான் இந்தியா அளவில் முயற்சி செய்தேன். அப்போது டிஜிட்டல் வசதியில்லை.

இப்போதும் பான் இந்தியா அளவில் படமெடுத்து என் பேரன் ஜேசனை அறிமுகப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால், இடையில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இப்போது இறைவன் அருளால் மீண்டும் வந்துள்ளேன். எனவே, மீண்டும் அந்த பான் இந்தியா படத்தைத் தொடங்க உள்ளேன், எனக் கூறினார்.

இதைத்தொடர்ந்து, அவரது மகன் சிம்புவின் திருமணம் எப்போது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.ராஜேந்தர், எனது குடும்பத்தை பற்றி கேள்வி கேட்டு சங்கடப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 490

    0

    1