அமிதாப் பச்சனுக்கு எழுதிய கதையில் நடிக்கிறாரா ரஜினி..?

Author: Rajesh
4 February 2022, 12:44 pm

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வெற்றி பொறாதது. அவரை மிகுந்த மன உழைச்சலுக்கு கொண்டு சென்றிருப்பதாகவே கூறப்படுகிறது. அதிலும் கடைசியாக வெளியான வெளியான அண்ணாத்த படமும் படுதோல்வியை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வரும் இந்த சூழ்நிலையில், ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ரஜினி அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி கூறிய கதை ரஜினிக்கு பிடித்து விட்டதாகவும், இந்த கதை முன்னதாக அமிதாப் பச்சனுக்காக எழுதப்பட்ட கதை என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த படத்தில் ரஜினி நடிப்பார் என்று எதிர்பார்க்க்படுகிறது. இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

  • question arises on falling of ajith cut out in tirunelveli திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ