மகள் இயக்கும் படத்தில் நடிக்கும் ரஜினியின் கதாபாத்திரம் இதுவா…? அடடா.. அப்போ செம மாசா இருக்குமே..!

Author: Vignesh
10 November 2022, 10:30 am

ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாதி முடிவடைந்ததாகவும், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என்றும் தெரிகின்றது. இந்நிலையில் இப்படத்தை தெடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனத்துடன் கைகோர்த்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.

lal-salaam - updatenews360

இதில் ஒரு படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதன் அதிகாரபூர்வ் அறிவிப்பு விரைவில் வெளியாகின்றது. மேலும் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார் ரஜினி.

கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்க ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தில் ரஜினி ஏற்று நடிக்கும் காதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

lal-salaam - updatenews360

அதன் படி ரஜினி இப்படத்தில் மும்பையை சார்ந்த டானாக நடிப்பதாகவும், அவர் 30 நிமிடங்கள் லால் சலாம் படத்தில் வருவார் என்றும் தகவல் வந்துள்ளது. மேலும் பாட்ஷா படத்தை போன்று ரஜினியின் கதாபாத்திரம் லால் சலாம் படத்தில் செம மாஸாக இருக்கும் என்றும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

lal-salaam - updatenews360
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 512

    0

    0