ரஜினி மகள்-னு சும்மாவா சொன்னாங்க… அப்பாவை போலவே இருக்கீங்களே ; ஐஸ்வர்யாவின் Latest photos!!

Author: Babu Lakshmanan
22 July 2022, 1:00 pm

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

இதனிடையே, நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘பயணி’ ஆல்பத்திற்கு நடிகர் தனுஷ் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நன்றி தெரிவித்தார். இதனால் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த நடிகர் தனுஷின் பெயரை நீக்கினர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . இந்த செயல் தனுஷ், ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி, இருவரும் சேர வேண்டும் என விரும்பி திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் இருவரும் மீண்டும் இணைவதற்கு சாத்தியமே இல்ல என்றே தெரிகிறது.

இந்த சூழலில், பிட்னஸ், ஆன்மீகத்தில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இன்று ஆடி வெள்ளிக்கிழமை அதுவுமாக, கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், ‘ஆடி வெள்ளி எப்பொழுதும் காப்பாய் காமாட்சி,” என்று கேப்சனையும் போட்டுள்ளார்.

இதனை பார்க்கும் ரசிகர்கள், தந்தை ரஜினிகாந்த் போலவே, ஆன்மீகத்தில் உங்களின் ஈடுபாடு மகிழ்ச்சியளிக்கிறது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!