கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு முதன்முறையாக கார் வாங்கிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!!
Author: Vignesh28 April 2023, 5:00 pm
தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான்.
இதனிடையே, ரஜினிகாந்த் எந்த விழா மேடையாக இருந்தாலும் தனது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் மற்றும் நல்ல விஷயங்கள் குறித்து கூறுவது வழக்கம். 2019ம் ஆண்டு அப்படி தர்பார் இசை வெளியீட்டு விழாவில் தான் வாங்கிய முதல் கார் குறித்து தெரிவித்து இருக்கிறார்.
அதில் அவர், பதினாறு வயதினிலே படம் வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருந்த நேரம் ஒரு பிரபல தயாரிப்பாளர் தன்னுடைய வீட்டிற்கு வந்து தன்னிடம் நடிக்க கால்ஷீட் கேட்டதற்கு, தானும் ஓகே சொல்லி 1000 ரூபாய் கேட்டதாகவும், இரண்டு நாளில் படப்பிடிப்பு தொடங்கிவிடும் இப்போது பணம் இல்லை நாளை தருகிறேன் என கூறியதாகவும், ஆனால் பணம் வரவில்லை, தயாரிப்பாளருக்கு போன் செய்து கேட்டால் நாளை படப்பிடிப்பிற்கு மேக்கப் போடுவதற்கு முன் தருகிறேன் என தெரிவித்து உள்ளார்.
மேக்கப் போடுவதற்கு முன் பணம் கேட்டால் தன்னை மோசமாகத் திட்டி உனக்கு கேரக்டர் இல்லை வெளியே போ என்று விரட்டியடித்தார். சரி போகிறேன் கார் அனுப்புங்கள் என்றால் நீ நடந்து போ, கொடுக்க முடியாது என தெரிவித்து உள்ளார்.
அந்த சம்பவத்தையடுத்து, சினிமாவில் கடுமையாக உழைக்கத் தொடங்கியதாகவும், பின்னர் தன் வாழ்க்கையில் முன்னேறி கார் வாங்கி அதே ஸ்டுடியோவில் கொண்டு சென்று நிறுத்தினேன் என்று தெரிவித்து உள்ளார்.
தற்போது, தனது முதல் காருடன் ரஜினி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ பாருங்கள்,