நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. காவாலா, டைகர் ஹுக்கும் பாடல்கள் மற்றும ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சு ஆகியவை படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் பெரிதும் தூண்டியுள்ளது.
இப்படியிருக்கையில், ஜெயிலர் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீகப் பயணமாக இமயமலை புறப்பட்டுச் சென்றார். அண்ணாத்த படம் தொடங்குவதற்கு முன்பு கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று வந்தார்.
கொரோனா பரவல் மற்றும் தனது உடல்நிலை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடங்களுக்கு செல்வதை ரஜினி தவிர்த்து வந்தார். இந்த நிலையில், அவர் மீண்டும் இமய மலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி மடம் வியாசர் குகை, சரஸ்வதி நதி மறையும் இடத்திற்கு ரஜினி சென்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மகாவதார் பாபாஜி குகைக்கு செல்வதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 2 மணி நேரம் ரஜினிகாந்த் மலையேறிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் அவர் பாபா குகையில் தியானம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.