தெறிக்கவிடும் 1st Half… பறக்கும் விசில்கள்.. 2வது Half-ல் சர்ப்ரைஸ் ; தியேட்டரில் ஜெயிலரை கொண்டாடும் ரசிகர்கள்…!!

Author: Babu Lakshmanan
10 August 2023, 11:04 am

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாதி பட்டையக் கிளப்புவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரைக்கு வந்தது.

‘ஜெயிலர்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது. தொடர்ந்து, தமிழகத்தில் 9 மணிக்கு படம் ரிலீஸாகியுள்ளது. படம் வெளியானதால் தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டத்துடன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாதி பட்டையக் கிளப்புவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

படம் பார்த்த ரசிகர்களில் ஒருவர் கூறுகையில்,” ஜெயிலர் படத்தின் முதல் பாதி சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ரஜினி மற்றும் யோகி பாபு வரும் காட்சிகள் செம காமெடியாக உள்ளது,” எனக் கூறினார். மேலும் ஒரு சிலர் முதல் பாதியில் செண்டிமெண்ட், காமெடி மற்றும் ஆக்ஷன் என அனைத்தும் சிறப்பாக இருப்பதாகவும், அனிருத்தின் இசை வெறித்தனமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இண்டெர்வெல் சீனில் வரும் ஆக்ஷன் பிளாக் செம மாஸாக இருப்பதாகவும், முதல் பாதியில் நன்றாக இருப்பதா இரண்டாவது பாதியில் ஒரு சர்ப்ரைஸான சிறப்பு தோற்றம் இருப்பதாகவும், அது ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக கொடுக்கும் என்று கூறினர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 621

    0

    0