ரஜினியால் தான் இப்படி ஒரு நிலைமையா..? பெரிய பட வாய்ப்பை தவறவிட்ட நடிகையின் குமுறல்…!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2022, 4:15 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.

Rajinikanth_updatenews360

ஆரம்ப காலக்கட்டத்தில் பல கஷ்டங்களுக்கு பிறகு, இன்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார். நடிகர் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக பெரிய பட வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

RajinikanthKeerthysuresh_updatenews360

அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்சை நடிக்க வைப்பதாக தான் திட்டமிட்டிருந்துள்ளனர். ஆனால், அந்த சமயத்தில் நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பொன்னியின் செல்வன் வாய்ப்பை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Keerthysuresh_updatenews360

மேலும், அந்த திரைப்படம் வெளிவந்த பிறகு, பலராலும் கிண்டல் செய்யப்பட்டு வந்தார். ஒருவேளை ரஜினியுடன் நடிக்காமல், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்திருக்கலாம் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 412

    0

    0