ஜெயிலர் படத்துல இப்படியொரு மாஸ் கிளைமாக்ஸ் சீனை தூக்கிய சென்சார்..? அட கடவுளே.. வெறித்தனமா இருந்திருக்குமே..!
Author: Rajesh13 August 2023, 2:17 pm
தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது. பீஸ்ட் படத்தின் மூலம் நெகட்டிவ் ரிவியூஸ் பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் செம கம்பேக் ஆக அமைந்துள்ளது.
ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றி நடைபெற்று வருகிறது. காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என கலந்த கலவையாக ஜெயிலர் திரைப்படம் அமைந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
ரஜினியின் ஸ்டைல், நெல்சனின் டார்க் காமெடி, அனிருத் இசை என பக்கா காம்போவாக அமைந்துள்ளது. பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் இத்திரைப்படம், இரண்டே நாட்களில் நூறு கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அனைவராலும் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது.
ஒரே காட்சியில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் மிரட்டிவிட்டனர். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் சீன் ஒன்றை சென்சார் நீக்கிவிட்டதாகவும், அக்காட்சி படத்தில் இடம்பெற்றிருந்தால் இன்னும் மாஸாக இருந்திருக்கும் என இப்படத்தின் எடிட்டர் நிர்மல் கூறியுள்ளார். ரஜினி ரசிகர்களோ அந்த டெலிடட் சீனையாவது ரிலீஸ் பண்ணுங்க பார்த்து ஃபயர் விடுறோம் என கெஞ்சி வருகின்றனர்.