‘காவாலா’ பாடல் பற்றி அனிருத் அப்போவே இத சொன்னார்.. அப்டியே நடந்துடுச்சு: அருண்ராஜா காமராஜ்..!
Author: Rajesh9 July 2023, 7:07 pm
தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.
பீஸ்ட் படத்தின் மூலம் நெகட்டிவ் ரிவியூஸ் பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் காவாலா பாடல் ரிலீஸ் ஆனது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுத்தில் அனிருத் இசையில் ஜானி மாஸ்டர் ஸ்டெப்ஸ் போட வெளியான காவாலா பாடலுக்கு தமன்னா டான்ஸ் ஆடி இருந்தார்.
காவாலா பாடலை எழுதியது குறித்து அருண்ராஜா காமராஜ் பேசியபோது, நல்ல டான்ஸ் பீட் இருக்கும்படி பாட்டு இருக்க வேண்டும் என்று கூறி இசையமைப்பாளர் அனிருத் என்னை அழைத்தார். அந்த பாடலில் தெலுங்கு வார்த்தைகள் இருக்க வேண்டும் என கேட்டதால், அவர் சொன்னபடி பாடலில் ஆங்காங்கே தெலுங்கு வார்த்தைகளை சேர்த்தேன். அரை மணிநேரத்தில் பாடலை எழுதுக் கொடுத்தேன்.
Vera Level Uh 😂😂#VibeForKaavaalaa #Kaavaalaa #Jailer @anirudhofficial @shilparao11 @Arunrajakamaraj @Nelsondilpkumar pic.twitter.com/F54ETXP0rd
— Rajini Fan Trend Videos (@RFTVideos) July 9, 2023
அதை பார்த்த அனிருத்தோ, பாடல் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக ஹிட்டாகும் என்றார். அவர் சொன்னது போன்றே நடந்துவிட்டது என கூறியுள்ளார். மேலும், இப்பாடலுக்கு ஸ்டெப்ஸ் போட்டு ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Competition has never looked this cute 😍😍😍 https://t.co/UO4Xm2PJFK
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 8, 2023