சிவகார்த்திகேயன் தந்தையின் வாழ்க்கை கதை தான் ஜெயிலர் படமா: இத கவனிச்சீங்களா..?

Author: Rajesh
5 March 2023, 4:00 pm

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து, மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடிக்கவுள்ளார்.

jailer----updatenews360

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய தந்தை தாஸ் சிறைச்சாலையில் ஜெயிலராக பணியாற்றி வந்தவர். சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலிப்குமார் இருவரும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்கள்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தந்தையின் வாழ்க்கை கதையை தான் ரஜினியை வைத்து ஜெயிலர் படமாக நெல்சன் திலிப்குமார் உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தில் வரும் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் சிவாகார்த்திகேயனின் தந்தையின் பிரதிபலிப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?